சினிமா

மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘லோகா’ படம்

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் ‘லோகா’ படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படத்தில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

டோமினிக் அருண் எழுதி இயக்கிய இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மர்மங்கள் நிறைந்த கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரமும் உருவாக்கமும் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் படத்தின் திரைகள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. அதாவது, இப்படம் உலகளவில் ரூ. 202 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. உலகளவில் ரூ. 200 கோடி மைல்கல்லை எட்டிய 4-வது மலையாளப் படம் என்ற பெயரையும் இப்படம் பெற்றிருக்கிறது.

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட