செய்தி

ரணிலின் நிலை குறித்து வெளியான தகவல்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க; மருத்துவமனையில் இருந்து வெளியேறும் திகதி குறித்து மருத்துவர்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க மருத்துவமனையில் இருந்து வெளியேற முடியும், ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அதிக ஓய்வு தேவை எனவும் அவர் தொடர்ந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருப்பாரா? அல்லது வீடு திரும்புவாரா? என்பது அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் முடிவைப் பொறுத்தது என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

பொது நிதியை அபகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க; கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு நீதிமன்றால் பிணை வழங்கப்பட்ட போது அவரின் அனைத்து நோய்கள் தொடர்பிலான அறிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன், அவரது இதயத்தின் 04 பிரதான தமனிகளில் 03 தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.