செய்தி

மருதமுனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

மருதமுனை பிரதான வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று காலை 6.00 மணிக்கு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து; பெரிய நீலாவணையில் இருந்து கல்முனை மாநகர சபைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் பெரியநீலாவணை சரஸ்வதி வீதியில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையென தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர், கல்முனை மாநகர சபையில் காவலாளியாக பணியாற்றி வருபவர் அவர்.

பெரியநீலாவணையில் அமைந்துள்ள கழிவகற்றல் நிலையத்தில் கடமையாற்றி விட்டு தனது வேலை முடிவுறுத்தல் பணிக்காக கல்முனை மாநகர சபைக்கு செல்லும் போது மருதமுனை பிரதான வீதியில் இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.