செய்தி

மக்களுக்கு விமானப்படை விடுத்துள்ள எச்சரிக்கை

பட்டங்கள் பறக்க விடப்படும் போது ஏற்படும் விமான விபத்துகள் குறித்து விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது, தற்போது பட்டங்கள் பறக்க விடப்படும் பருவ காலமாகும்.

அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விமானப்படை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், விமான ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் பறக்கவிடப்படுவது மிகவும் ஆபத்தான விடயமாகும்.

விமான ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டங்கள் பறக்கவிடுவது உலகெங்கிலும் உள்ள விமான விபத்துகளுக்கு ஒரு பிரதான காரணமாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது விமானம் பறப்பதற்கு நேரடி தடையாக இருக்கும்.

நாட்டில், கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குராக்கொட, சீன விரிகுடா, பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தள போன்ற பகுதிகளிலும் பட்டம் பறக்கவிடுவது மிகவும் ஆபத்தானது.

இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது அத்தியாவசியமானதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.