செய்தி

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞன் கைது

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் சனிக்கிழமை (09) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் பொரளை பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

பொரளை, சஹஸ்புர விளையாட்டு மைதானத்தை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் குழு மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் ஒருவர் மரணமடைந்தார்.

இதை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.