செய்தி

இலங்கையர் இருவர் காரைக்காலில் கைது

இந்தியாவின் புதுச்சேரி காரைக்காலில்வைத்து இரண்டு இலங்கையர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறையை சேர்ந்த குறித்த இருவரும் கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு எடுத்துச்செல்வதற்காக பைபர் படகு ஒன்றின் மூலம் காரைக்காலுக்கு சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 50000 இந்திய ரூபா மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த மாதமும் இதுபோன்ற சம்பவம் ஒன்றில் திருகோணமலை மற்றும் வவுனியாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் 300 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.