சைபர் தாக்குதலிலிருந்து தப்பிக்க புதிய வசதி – மெட்டாவின் அறிவிப்பு!
முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, “Strict Account Settings” எனும் புதிய உயர் பாதுகாப்பு அம்சத்தை மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த அம்சம், பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. பயனர்கள் இந்த அம்சத்தை On செய்தவுடன், செயலி முழுவதும் பலத்த பாதுகாப்பு வலயத்திற்குள் வரும். முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் கோப்புகள் (Attachments) மற்றும் மீடியாக்கள் தானாகவே தடுக்கப்படும். தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் அமைதியாக்கப்படும் […]






