தகவல்கள்

உங்க WhatsAppஐ யாராவது யூஸ் பண்றாங்களா? கண்டுபிடிக்க டிப்ஸ்

வட்ஸ்அப் (WhatsApp) உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் ஒரு பிரபலமான செயலி.வாட்ஸ்அப்பில் பல பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், பல சாதனங்களை இணைக்கும் திறனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

நம்முடைய வாட்ஸ்அப் எக்கவுன்டை ஹேக் செய்து அதனை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, அதை கண்டுபிடிப்பதற்கு கீழே தரப்பட்டுள்ள பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. முதலில் ‘செட்டிங்ஸ்(Settings)’ ஒப்ஷனுக்கு செல்ல வேண்டும். அதில் ‘லிங்க் எ டிவைஸ்(Link a device)’ என்பதை கிளிக் செய்யவும். இதில் வாட்ஸ்அப் எக்கவுண்ட் அக்டிவாக இருக்கும் அனைத்து சாதனங்களும் காட்டும்.

2.அதில் உங்களுக்கு தொடர்பற்ற சாதனம் அல்லது பிரௌசர் இருப்பதை நீங்கள் கவனித்தால் உடனடியாக அதனை கிளிக் செய்து ‘லொக்-அவுட்(Log-Out)’ செய்ய வேண்டும் அல்லது பாதுகாப்பாக இருப்பதற்கு அனைத்து சாதனங்களில் இருந்தும் ‘லொக்-அவுட்(Log-Out)’ செய்யலாம்.

3.அடுத்து அனுப்பாத மெசேஜ்கள்(Messages),பரிட்சயம் இல்லாத வட்ஸ்அப் குழுக்கள்( WhatsApp Groups)அல்லது உரையாடல்கள்(Chats) இருப்பதை நீங்கள் கவனித்தால், உங்களுடைய வட்ஸ்அப் எக்கவுண்டை வேறு யாரோ பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறி.அல்லது நமது லாஸ்ட் சீன்(Last seen) அல்லது நாம் ஒன்லைனில்(Online) இல்லாத நேரத்தில் ஒன்லைன் காட்டுவது போன்ற பிரச்சனைகள் இருந்தால் நமது வட்ஸ் அப் எக்கவுண்ட் வேறு யாரோ கையில் மாட்டி உள்ளது என்பதற்கான அறிகுறி.

பாதுகாக்கும் முறை

வட்ஸ்அப் எக்கவுன்ட் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு வட்ஸ்அப்பில் உள்ள ‘எக்கவுன்ட் செக்யூரிட்டி(Account Security)’ என்பதற்கு சென்று ‘ஷோ செக்யூரிட்டி நோட்டிஃபிகேஷன்(Show security notifications)’ ‘செக்யூரிட்டி கோடு’  ‘என்கிரிப்ஷன் நோட்டிஃபிகேஷன்’ என்பதை எனேபிள் செய்ய வேண்டும்.

யாராவது உங்களுடைய என்கிரிப்ஷன் குறியீட்டை மாற்றும்போது அதற்கான நோட்டிஃபிகேஷனை உங்களுடைய மொபைல் போனில் பெறுவதற்கு செட்டிங்ஸ் > எக்கவுன்ட் செக்யூரிட்டி என்பதில் உள்ள ‘ஷோ செக்யூரிட்டி நோட்டிஃபிகேஷன்’ என்பதை எனேபிள் செய்ய வேண்டும்.

வேறு ஒருவர் உங்களுடைய வட்ஸ்அப் எக்கவுன்டை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் உறுதி செய்துவிட்டால் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களில் இருந்தும் லொக்-அவுட் செய்யுங்கள்.

மேலும், 2 ஸ்டெப் வெரிஃபிகேஷனை(Two-step verification) ஒன் செய்வதன் மூலமாக கூடுதல் பாதுகாப்பு அடுக்கை சேர்க்கலாம்.சந்தேகத்திற்குரிய அப்ளிகேஷன்கள் அல்லது ஃபைல்களை அழித்து விடுங்கள். இறுதியாக இது குறித்து வட்ஸ்அப் சப்போர்ட்டில் புகார் அளிக்க வேண்டும்.  

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்