தகவல்கள்

இனி மொழி பிரச்சினை இல்லை: வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்

சமூக வலைத்தளங்களில் தவிர்க்க முடியாத செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

குறுஞ்செய்தி அனுப்பும் தளமாக முதலில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் கையகப்படுத்தியதில் இருந்து பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு வருகிறது.

ஆடியோ, வீடியோ, பிடிஎப் பைல்கள் அனுப்பும் வசதி, வாட்ஸ் அப்பில் வீடியோக்கள், புகைப்படங்களை ஸ்டேட்டசாக வைக்கும் வசதி என பலப்பல அப்டேட்கள் அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்றை கொண்டு வந்து இருக்கிறது.

அதாவது, பயனர்கள் அனுப்பும் மெசேஜ் எந்த மொழியில் இருந்தாலும் அதை மொழிமாற்றம் செய்து தெரிந்த மொழியில் படிக்கும் வசதி விரைவில் அறிமுகம் ஆக உள்ளது.

முதல் கட்டமாக ஆங்கிலம், இந்தி, அரபிக், ஸ்பானிஷ் உள்ளிட்ட 19 மொழிகளில் இந்த சேவை கிடைக்க உள்ளது.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்