கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு ,அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார், 2பேர் காயமடைந்துள்ளனர்.
வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோத இழுவைமடி தொழில் இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகளை பதிவு செய்தும் எந்தவிதமான பதிலும் இல்லை என நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.
தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜோ பைடனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜோ பைடன் 2023 இல் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு தேவையான இரசாயனம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் கொள்கலன்கள் மித்தேனிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசத்தில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கபப்டுள்ளது.