செய்தி

போதைபொருள் வழக்கில் மொட்டு கட்சி உறுப்பினர்!

ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 50,000 கிலோகிராம் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், மொட்டு கட்சி உறுப்பினர் கைது செய்யப்ட்டுள்ளார்.

சம்பவத்தில் இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் சகோதரருக்குச் சொந்தமான நிலத்தில் ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைதான முன்னாள் உறுப்பினர் இந்த முறை இலங்கை பொதுஜன பெரமுனவின் கீழ் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.