இலங்கையின் 2025ஆம் ஆண்டுக்கான சுற்றுலா வருவாய் பற்றி சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மத்திய வங்கி வெளியிட்ட புள்ளிவிபரங்களுக்கு இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயங்களில் 3மாதங்களாக வரி விதிப்பு தொழிலாளர்கள் பல நெருக்குதல்களை ஏற்படுத்தியுள்ளதாக EPZ செயல்படும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 08 பேர் ஆண்கள் எனவும் 03 பேர் பெண் சந்தேக நபர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் சோதனை நடவடிக்கையின் போது, 08 தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கண்காணிப்பாளர் அனுருத்த பண்டாரநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பயின்று வந்த மருத்துவ மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.