செய்தி

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் CIDகு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணைக்காக இவர் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா,

இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நேற்றையதினம் காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.