செய்தி

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விசேட சலுகை

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கம் சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கலாசார நிதியத்திற்கு சொந்தமான திட்டங்களை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழு இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் குழந்தைகளிடையே கலாசார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்துவதும், தேசிய பாரம்பரியம் மற்றும் இடங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

அதன்படி, இந்த வாய்ப்பின் காரணமாக, சிகிரியா, யாபஹுவ, தம்புள்ளை உள்ளிட்ட மத்திய கலாசார நிதியத்திற்குச் சொந்தமான 26 தொல்பொருள் மதிப்புள்ள இடங்களை,

நுழைவுச் சீட்டுக்கள் இல்லாமல் குழந்தைகள் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கு இணையாக, வெளிநாட்டு குழந்தைகளுக்கு வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் சம்பந்தப்பட்ட இடங்களுக்குள் நுழைவதற்கான அனுமதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.