ஜப்பானின் தெற்கு தீவுப் பகுதிகளில் டால்பின் புயல் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒகினவா மற்றும் அமாமி தீவுகளில் பலத்த காற்றுடன் புயல் வீசியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் பாதிப்புக்கு அதிக வாய்ப்புள்ள துறைமுகங்கள் மூடப்பட்டதுடன், பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளன.
டால்பின் புயலின்போது மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து பலத்த காற்று வீசியுள்ளது. சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 216 கிலோமீட்டர் வரை பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக 3 பேர் தவறி விழுந்ததுடன், மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 5 பேரும் வயது முதிர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, டால்பின் புயல் ஜப்பானை கடந்து சீனாவை நோக்கி நகர்ந்துள்ளது. சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

