செய்தி

வெளிநாடு செல்ல தயாரா? 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

2026 ஆம் ஆண்டில் 310,000 இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. 

தற்போதைய தரவுகளின்படி, குவைத் நாடு அதிகப்படியான தொழிலாளர்களை எதிர்பார்க்கின்றது. இதற்கமைய 77,500 தொழில்வாய்ப்புடன் குவைத் முன்னணியில் உள்ளது. 

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 63,500 தொழிலாளர்களையும் கட்டாருக்கு 44,000 தொழிலாளர்களையும் சவூதி அரேபியாவுக்கு 31,000 தொழிலாளர்களையும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இவை தவிர, மேலும் 17 நாடுகளுக்குப் பணியாளர்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில், இஸ்ரேலுக்கு 15,000 பேரும், ஜப்பானுக்கு 12,500 பேரும் தென் கொரியாவிற்கு 6,000 பேரும் அனுப்பப்படவுள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டில் சுமார் 3,11,207 தொழிலாளர்கள் வெளிநாடு சென்றிருந்தனர். 

இதன் மூலம் இலங்கைக்கு 8,000 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நிய செலாவணி வருமானமாகக் கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் இதுவரை 20,484 பணியாளர்கள் வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.