செய்தி

ஆசியாவை வாட்டும் காலநிலை.. மற்றுமொரு நாட்டில் 900 உயிரிழப்புக்கள்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பட்டினியால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவை வெப்ப மண்டல புயல்கள் மற்றும் பருவமழை சங்கிலித் தொடராகத் தாக்கி, சுமத்ரா மழைக் காடுகளிலிருந்து இலங்கையின் மலைப் பகுதித் தோட்டங்கள் வரை நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளைத் தூண்டியுள்ளது.

கடந்த வாரத்தில் இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் முழுவதும் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளில் 1,790 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் ஆச்சே மற்றும் வடக்கு சுமத்ரா மாகாணங்களில், வெள்ளம் சாலைகளை அடித்துச் சென்றுள்ளது, வீடுகளை சேற்றில் மூழ்கடித்துள்ளது, மேலும் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.