செய்தி

பிரித்தானிய மக்களுக்கு கனமழை – வெள்ளம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு கனமழையால் வெள்ளம் மற்றும் பயண இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தென்மேற்கு பிரித்தானியா மற்றும் தெற்கு வேல்ஸுக்கு வானிலை அலுவலகம் மஞ்சள் வானிலை எச்சரிக்கையை வெளியிட்டது.இது அந்நாட்டு நேரப்படி திங்கள்கிழமை 6:00 GMT முதல் செவ்வாய்கிழமை 6:00 மணி வரை நடைமுறையைில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மஞ்சள் எச்சரிக்கை.. 

தென்மேற்கிலிருந்து பிரித்தானியாவை நெருங்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கனமழையையும் பலத்த காற்றையும் கொண்டு வரும் என்றும் இது புதன்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் என்றும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில், “தற்போது, ​​இந்த தாழ்வு மண்டலத்தின் சரியான பாதை, ஆழம் மற்றும் நேரம் நிச்சயமற்றதாக உள்ளது.இதனால் பலத்த காற்று அல்லது கனமழையால் எங்கு அதிகம் பாதிக்கப்படும் என்பதை தீர்மானிப்பது கடினமாகிறது” என்று வானிலை அலுவலகத்தின் துணைத் தலைமை வானிலை ஆய்வாளர் ஸ்டீவன் கீட்ஸ் கூறியுள்ளார். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.