செய்தி

மருத்துவமனைக்குள் நுழைந்து காட்டு யானை அட்டகாசம்; அச்சத்துடன் நோயாளர்கள்

மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் காட்டு யானை ஒன்று நுழைந்து அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஜன்னலை உடைத்து, நோயாளிகள் வைத்திருந்த பொருட்களை வெளியே எடுத்து உண்டதுடன், படுக்கை மற்றும் இரும்புப் பெட்டியை சேதப்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஊழியர்கள் கூச்சலிட்டு காட்டு யானையை விரட்டியடித்துள்ளனர். 

காட்டு யானைகள் அடிக்கடி மருத்துவமனையைத் தாக்கி, சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும் இதனால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் தொடர்ந்து இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

மருத்துவமனையைப் பாதுகாக்க மின் வேலி அமைக்க வேண்டும் என்று தாங்கள் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைளும் எடுக்காதிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.