2026 – 2029 தேர்தல்கள் தொடர்பான மூலோபாய திட்டம் நவம்பரில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஹட்டன் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு தேர்தல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு மாகாணசபைத் தேர்தல் மற்றும் 2029ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் என்பன நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் குறித்த தேர்தல்கள் தொடர்பான மூலோபாயத் திட்டம் ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்துள்ளது.
குறித்த மூலோபாயத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

