செய்தி

தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று 12வது நாளாக  திருகோணமலை மாவட்ட செயலகம் முன் இடம்பெற்றுவருகின்றது. 

திருகோணமலை வளங்களை சூரையாடுவதை நிறுத்து, போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த வாரம் கொழும்பில் பிரதமரை சந்தித்த போது பத்து நாட்களுக்குள் தீர்வை வழங்குவதாக கூறியிருந்தார். இன்னும் பிரதமரின் காலக்கெடு முடிவதற்கு 06 நாட்களே உள்ளன.

நல்லதொரு தீர்வை பிரதமர் எமக்கு வழங்குவார் என  எதிர்பார்க்கிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.