செய்தி

யாழ்.விமான நிலையத்தில் தங்கத்துடன் பெண் கைது

யாழ் (Jaffna) பலாலி விமான நிலையம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கத்தை கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் இந்தியாவில் இருந்து தங்கத்தை கடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில், யாழ். பலாலி விமான நிலைய அதிகாரிகளின் சோதனையில் ஈடுபட்டபோது தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின் கடத்தப்பட்ட தங்கத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.