செய்தி

இலங்கை – இந்திய உறவை மேம்படுத்த ஒப்புதல்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இடையிலான கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பில் கூடிய இந்திய – இலங்கை பௌன்டேசன் உயர் மட்ட அமர்வில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மகிசினி கொலோனே ஆகியோர் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கியுள்ளனர்.

இதன்போது, கலாசாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின், புதிய திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.