செய்தி

வார இறுதியில் உச்சத்தை எட்டிய தங்க விலை!

சென்னையில், வாரத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை இந்திய ரூ.480 உயர்ந்து ரூ.82,320க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.60 அதிகரித்து ரூ.10,290 ஆக உள்ளது.

இந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. கடந்த புதன்கிழமை ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்த நிலையில், வியாழக்கிழமை ரூ.400 குறைந்து ரூ.81,760க்கு விற்பனையானது.

ஆனால், வெள்ளிக்கிழமை ரூ.80 உயர்ந்து மீண்டும் ரூ.81,840க்கு வந்தது. இன்று மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.145க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வு, தங்க முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.      

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.