செய்தி

தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் முத்துநகர் விவசாயிகள்

திருகோணமலை – முத்துநகர் விவசாயிகள் நேற்றைய தினமும் (18) இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, “விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து நிறுவனங்களுக்க வழங்கப்பட்ட முத்துநகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு” போன்ற பதாகைகளை ஏந்தியவாறு சத்தியாக் கிரக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதேநேரம் இன்று (19) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் மாவட்ட செயலகம் முன்பாகவே குறித்த போராட்டம் இடம்பெற்றது.

பொலிஸார் போராட்டகாரர்களின் இடத்தை அகற்ற முற்பட்ட போதும் கூட அகற்றப்படவில்லை. சூரிய மின் சக்திக்கு வழங்கப்பட்ட விவசாய காணிகளை மீள பெற்றுத் தரக் கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.