செய்தி

கொழும்பில் பாரிய போராட்டம்; அருட்தந்தை மாக்கஸ் தெரிவிப்பு

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்றைய 47 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், இன்று மாலை கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்றுடன் 47 ஆவது நாட்களை கடக்கின்றது.

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை(19) கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன் மாலை 2 மணி அளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது கிராமங்களில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் கோபுர வேலைத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்விற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது,

ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் 36 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே மக்களின் பிரச்சினைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் கடந்த 47 நாட்களாக மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. எனினும் அரசாங்கத்தால் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் இடம்பெற உள்ளது.

குறித்த போராட்டத்தில் தென் பகுதியில் உள்ள சிங்கள சகோதரர்களும், மத தலைவர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

எனவே குறித்த போராட்டத்தில் புத்திஜீவிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் இணைந்து ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர். அவர்களையும் வரவேற்கின்றோம்.

தேசத்தின் குரலாக இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன் எமது குரல் ஒலிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.