செய்தி

வானில் ஏவப்படவுள்ள மூன்றாவது செயற்கைக்கோள்

இலங்கை பொறியியலாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புகளுடன் உருவாக்கப்பட்ட நாட்டின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று (19) சுற்றுப்பாதையில் செலுத்தப்பட உள்ளது என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

BIRDS-X DRAGONFLY என பெயரிடப்பட்ட இந்த நனோ செயற்கைக்கோள், கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி நாசாவால் ஏவப்பட்ட SPX33 ரொக்கெட் மிஷன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில் இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2.15 க்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்தப்பட உள்ளது.

இலங்கையின் முதல் நனோ செயற்கைக்கோளான ராவணா-1 செயற்கைக்கோள் 2019 ஆம் ஆண்டிலும் ஐந்து சர்வதேச பங்காளர்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட KITSUNE செயற்கைக்கோள் 2022 ஆம் ஆண்டிலும் ஏவப்பட்டது.

இதனை தொடர்ந்து ஏவப்படும் நாட்டின் மூன்றாவது நனோ செயற்கைக்கோளான BIRDS-X டிராகன்ஃபிளை ஆராய்ச்சி செயற்கைகோள் இலங்கையின் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.