சினிமா

‘குஷி’படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு மே 19ம் தேதி வெளியான படம் குஷி.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படத்தினை எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்தார்.

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக சொல்லப்போனால் விஜய் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக இப்படம் அமைந்தது எனலாம். இந்த படம் உலகளவில் ரூ. 22 கோடிக்கு மேல் அப்போதே வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்திருக்கிறது.

இந்த நிலையில், இப்படம் தரம் உயர்த்தப்பட்ட 4 தரத்தில் டிஜிட்டல் முறையில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது, வருகிற 25ந் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குஷி பட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா குஷி படத்தின் ரீ ரிலீஸ் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்.

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட