செய்தி

பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்

உப்புவெளி பொலிஸ் பிரிவில் திருகோணமலை – அம்பேபுஸ்ஸ வீதியில் அனுராதபுரம் சந்திக்கு அருகில்; 04வது மைல்கல் திசையிலிருந்து திருகோணமலை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த பாதசாரி மீது விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பாதசாரி, மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் பலத்த காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி உயிரிழந்தார்.

இவ்வாறு இறந்தவர் சம்பூர் கிழக்கு, மூதூரில் வசித்து வந்த 71 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.