ஆன்மீகம்

மரணத்தை எதிர்கொள்ளும் இறுதி தருணம்…

உடலில் இருந்து உயிர் பிரியும் தருணத்தில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் என்ன மாதிரியான தருணங்களை நினைவு கூர்கிறார்கள், உண்மையில் அவர்களது மனநிலையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மரணம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம், ஆனால் மனிதர்கள் சந்திக்கும் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகவும் மரணம் இருந்து வருகிறது. நம்மில் பலர் வாழ்க்கையின் “இறுதி நொடிகளில் என்ன நடக்கும்? அந்த தருணம் எப்படி இருக்கும்?” என்று யோசிப்பதுண்டு. ஆனால், அந்த அனுபவத்தை நெருங்கும் போது தான் அதன் உண்மை தன்மை தெரிய வரும்.

இந்த பயணத்தில், நோயை தடுக்க போராடும் மற்றும் சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள், இறுதி தருணங்களை எதிர்கொள்ளும் நோயாளிகளின் அனுபவங்களை நெருக்கமாகக் கவனித்து, அரிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களின் குறிப்பு மற்றும் உணர்தலின் படி, பெரியவர்களும் குழந்தைகளும் மரணத்தை அணுகும் விதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதை வெளிப்படுத்துகிறது. இவை வாழ்க்கை அனுபவம், உணர்ச்சி ,முதிர்ச்சி மற்றும் கற்பனை சக்தி போன்றவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன.

பெரியவர்கள்: நினைவுகள், சமரசம், முடிவு தேடல்

வாழ்க்கையின் இறுதி காலத்தை நெருங்கும் பெரியவர்கள் பெரும்பாலும், தங்கள் கடந்த கால நினைவுகளையும், உறவுகளையும் மீண்டும் நினைவுகூர்கிறார்கள்.

மகிழ்ச்சியான தருணங்கள் – வாழ்க்கையில் மகிழ்ச்சியூட்டிய அல்லது அர்த்தமுள்ள நிகழ்வுகளை நினைவுபடுத்தி, மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைகிறார்கள்.

சமரசம் மற்றும் மன்னிப்பு – தீர்க்கப்படாத கணக்குகள், தவறுகள் குறித்த மனஅமைதியைத் தேடுகிறார்கள்.

முடிவு மற்றும் அமைதி – இத்தகைய அனுபவங்கள் இறுதி நொடிகளில் ஆறுதலை அளிக்கின்றன.

டாக்டர் கெர் பகிர்ந்த ஒரு உருக்கமான உதாரணம்: இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் சிப்பாய் ஒருவர், வாழ்நாள் முழுவதும் பிடிஎஸ்டி-யால் வேதனைப்பட்டார். ஆனால் இறப்பதற்கு முன்பு, அவர் கனவில் தனது மிகவும் மகிழ்ச்சியான நாளான இராணுவத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட தருணத்தை மீண்டும் நினைவுகூர்ந்த பிறகு நிம்மதியாக காலமானார்.

குழந்தைகள்: கற்பனை, பாதுகாப்பு, அன்பு

மாறாக, குழந்தைகள் மரணத்தை மிகவும் வித்தியாசமாக எதிர்கொள்கிறார்கள்.

குறைந்த பயம் – மரணம் குறித்த சிக்கலான வாழ்வியல் அச்சங்கள் இல்லாததால், அவர்கள் அதனை சுமையாக உணருவதில்லை.

கற்பனை உலகங்கள் – செல்லப் பிராணிகள், விலங்குகள், விளையாட்டு இடங்கள் போன்ற பாதுகாப்பான காட்சிகளையே மனதில் உருவாக்குகிறார்கள்.

அன்பின் ஆறுதல் – பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களின் அன்பு, கற்பனையான நண்பர்களின் தோழமை ஆகியவற்றில் ஆறுதலைக் காண்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு சிறுமி, மரணத்தை நெருங்கிய போது, விலங்குகள், நீச்சல் குளம், பியானோ, சூரிய ஒளி நிறைந்த ஒரு கோட்டையை கற்பனை செய்தாள். அதற்கான விளக்கம் கேட்ட போது அவள் சொன்ன வார்த்தை மிக எளிமையானது. “இது ஒரு பாதுகாப்பான இடம்.” என்றே அவள் கூறியிருக்கிறாள்.

பெரியவர்கள் vs குழந்தைகள்: முக்கிய வேறுபாடுகள்

வாழ்க்கை மதிப்பாய்வு vs கற்பனை உலகங்கள்

பெரியவர்கள் தங்கள் வாழ்க்கை நினைவுகளை மீண்டும் பார்வையிடுகிறார்கள், ஆனால், குழந்தைகள் மாறாக கற்பனைச் சூழலில் ஆறுதல் தேடுகிறார்கள்.

அச்சம் மற்றும் பதட்டம் vs சமாதானமான ஏற்றுக்கொள்ளல்

பெரியவர்கள் இறப்பை எதிர்கொள்ளும் போது அச்சம், கவலை போன்ற உணர்ச்சிகள் அதிகமாக இருக்கலாம், ஆனால் குழந்தைகள் அதை எளிமையாகவும், அமைதியாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

முடிவு மற்றும் சமரசம் vs அன்பும், பாதுகாப்பும்

பெரியவர்கள் இறுதி எண்ணங்கள் மற்றும் மன்னிப்பை நாடுகிறார்கள். ஆனால், குழந்தைகள் அன்பு, பாதுகாப்பு, நிம்மதி ஆகியவற்றை விரும்புகிறார்கள்.

இவ்வாறாக, மேற்குறிப்பிட்ட இந்த தகவல்கள், மரணம் என்பது பயமூட்டும் ஒரு தருணமாக அல்லாமல், அதே நேரத்தில் பெரியவராக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி தங்கள் அனுபவங்கள், நினைவுகள், கற்பனைகள் வழியாக தனித்துவமாக அணுகும் ஒரு பயணமாக இருக்கின்றன என்கிற ஒரு சக்திவாய்ந்த உண்மையை நினைவூட்டுகின்றன.

You may also like

ஆன்மீகம்

கடைப்பிடிக்கவேண்டிய ஆன்மீக குறிப்புகள் !

செல்வம், வளமை, வெற்றி மற்றும் தனலாபம் ஆகியவை பெருக நாம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்கவேண்டிய ஆன்மீக குறிப்புகள் தொடர்பான விளக்கம்.
ஆன்மீகம்

சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழா

தமிழ் பண்பாட்டு ஊர்வலத்துடன் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா இன்று மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,