செய்தி

மட்டு நகரில் சமையல் எரிவாயு கசிவால் பெண் பலி

மட்டக்களப்பில் சமையல் எரிவாயு கசிவு சம்பவத்தில் வாழைச்சேனை பெண் ஒருவர் புதன்கிழமை (10) மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் வாழைச்சேனை ஓட்டமாவடி -1 அரபா வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஏ.எம்.உம்மு ஹதீஜா என்பவரே மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த பெண், கடந்த வியாழக்கிழமை(04) காலை தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயுவை பயன்படுத்தும் போது அதன் வயர் வெடித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது எரிகாயங்களுக்கான பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.