செய்தி

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு தொடங்கிய போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார். ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.

எனவே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள யாரோவா கிராமம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் 20-க்கும் மேற்பட்டஅப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதனை கொடூரமான தாக்குதல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்தார்.

மேலும் ரஷியாவை கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கை தேவை என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.