செய்தி

தொடருந்துடன் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(02) இடம்பெற்றுள்ளது. களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான 26 வயதுடைய சந்தரலிங்கம் சுரேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மோதியே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு அதையடுத்து வைத்தியசாலைக்குச் சென்று பிரேதத்தைப் பார்வையிட்ட பின்னர் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் 1400இற்கும் மேற்பட்ட தொடருந்து கடவைகள் இருந்தும் 400இற்கும் மேற்பட்ட கடவைகள் பாதுகாப்பற்றதாகவே காணப்படுகிறது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.