சிறிலங்கன் ஏர்லைன்ஸ் செப்டம்பர் முதலாம் திகதி தனது 46ஆவது ஆண்டு நிறைவை சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கொண்டாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 1 முதல் 5 ஆம் திகதி வரை சிறிலங்கன் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம்; வணிக வகுப்பு பற்றுச்சீட்டுக்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 20% தள்ளுபடியும் பொருளாதார வகுப்பு பற்றுச்சீட்டுகளுக்கு 15% தள்ளுபடியும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிறிலங்கன் ஏர்லைன்ஸின் விசுவாசத் திட்டத்தின் (loyalty program) உறுப்பினர்களுக்கும் 46% போனஸ் மைலேஜ் கொடுப்பனவு கிடைக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

