செய்தி

ராஜிதவுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு ஆகஸ்ட் 29ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, ஒலிபெருக்கி மூல அறிவிப்பை நீதிமன்ற அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்ற அதிகாரிகள் நேற்று அவரது வீட்டில் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

அத்துடன் மாலபே, தலஹேனவில் உள்ள அவரது இல்லத்தில் ஒலிபெருக்கி மூல அறிவிப்பையும் வெளியிட்டனர்.

முன்னதாக, நீதிமன்றத்தைத் தவிர்ப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்து எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க லஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அவர் உத்தரவிட்டார்

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.