செய்தி

திருகோணமலையில் கதவடைப்பு முன்னெடுப்பு

திருகோணமலை- தம்பலகாமம் பகுதியிலும் இன்று (18) கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்தநிலையில், தம்பலகாமம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டும் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

இதன் போது மக்களின் நடமாட்டமும் குறைந்து வீதி வெறிச்சோடி காணப்பட்டது. வடக்கு, கிழக்கில் பூரணமான கதவடைப்பு அனுஷ்டிப்பு இன்று இடம்பெற்ற நிலையில் தம்பலகாமம் வர்த்தகர்களும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிராகவும் முல்லைத்தீவு இளைஞனின் உயிரிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருகோணமலை நகர் பகுதியிலும் இன்று (18) கதவடைப்பு அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை நகர் பகுதியில் வழமை போன்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டும் ஒரு சில கடைகள் மூடப்பட்டு இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

திருகோணமலை பிரதான சந்தை திறக்கப்பட்டுள்ள நிலையில் வியாபார நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

இதன் போது மக்களின் நடமாட்டமும் காணப்படுகிறதுடன் பொது போக்குவரத்து சேவை வழமை போன்று இடம் பெறுகின்றது.

வடகிழக்கில் பூரணமான கதவடைப்பு அனுஷ்டிப்பு இன்று இடம் பெற்ற நிலையில் திருகோணமலை நகர் பகுதியில் உள்ள அரச திணைக்களங்கள் மற்றும் அரச பாடசாலைகளும் இயங்கி வருகின்றன.

குறிப்பாக, கிண்ணியா பகுதியில் முழுமையாக கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் வழமையாக இடம் பெறுகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கதவடைப்புக்கு ஆதரவு என செய்தி வெளிவந்த நிலையிலும், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பு நடவடிக்கைக்காக துண்டு பிரசுர விநியோகத்தை நேற்று திருகோணமலை நகர் பகுதியில் குறித்த சபையின் தவிசாளர் குழுவுடன் இணைந்து ஈடுபட்டிருந்தார்.

ஆனாலும் முஸ்லிம் வர்த்தகர்கள் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதை இன்றைய நடவடிக்கைகள் எடுத்து காட்டுகின்றன.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.