செய்தி

நல்லூர் வந்தவருக்கு நேர்ந்த பெரும் துயரம்

நல்லூர் திருவிழாவுக்காக கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ். வந்த நபர் ஒருவர் கட்டிலில் உறங்கியவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் வசிக்கும் 52வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கொழும்பில் வசிக்கும் இவர் நல்லூர் ஆலய திருவிழாவுக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு யாழ்ப்பாணத்துக்கு குடும்பமாக வந்து திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார்.

இவர் திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.இதன்போது நோயாளர்காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த நோயாளர்காவு வண்டி, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்து திரும்பிச் சென்றது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.