செய்தி

இலங்கையில் அதிகரித்து வரும் போஷாக்கின்மை

இலங்கயில் தற்போதைக்கு 16வீதமான குடும்பங்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறிப்பாக பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் கடுமையான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போதைக்கு இலங்கையில் நான்கில் ஒரு குடும்பம் போஷாக்கான உணவு இன்றி அல்லது போதுமான உணவு இன்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான குடும்பங்களில் மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவு குறைக்கப்பட்டுள்ளது., அல்லது உணவின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் ஐந்து வயதுக்குக் குறைவான பிள்ளைகள் கடுமையான போஷாக்கின்மை காரணமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.