2011ஆம் ஆண்டின் பேரழிவான சுனாமிக்குப் பிறகு, ஜப்பான் சாதாரணமாக மீண்டு எழவில்லை மாறாக தங்கள் பாதுகாப்பிற்காக கோட்டையையே கட்டி எழுப்பியிருக்கிறது.
மிகவும் ஆச்சரியப்படுத்தும் வகையில் 395 கிலோமீட்டர் நீளம் கொண்ட “பெரும் சுனாமி சுவர்” இன்று அங்கே நிற்கிறது.
சில இடங்களில் அது நான்கு மாடிக் கட்டிடம் உயரம் (14.7 மீட்டர்) கொண்டது; அலைகளின் கோபத்தை தடுக்க, 25 மீட்டர் ஆழமான அடித்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கான்கிரீட் சுவரோடு மட்டும் ஜப்பான் நின்றுவிடவில்லை. கடற்கரையைச் சுற்றி அவர்கள் 90 லட்சம் மரங்களை நட்டனர் இதுவே “இவ்வுலகின் மாபெரும் இயற்கையான மரங்களின் தடுப்பு சுவர்.”
இந்த இயற்கைத் தடுப்பு, அலைகளின் வேகத்தை மந்தமாக்கி, கடலில் மீண்டும் இழுத்துச் செல்லக் கூடிய ஆபத்தான சிதைவுகளைத் தடுத்து நிறுத்துகிறது.
இது மனிதன் உருவாக்கிய பூமியின் மிகத் துணிச்சலான பேரிடர் பாதுகாப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.

