செய்தி

ரயில்வே துறையின் புதிய முகாமையாளர் நியமனம்

தொடருந்து திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவீந்திர பத்மப்பிரிய, நேற்றையதினம் தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இவர், முன்னதாக திட்டமிடல் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பதவியில் செயற்பட்டிருந்தார்.

தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளராக இருந்த தம்மிக்க ஜயசுந்தர, அண்மையில் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து ரவீந்திர பத்மப்பிரிய அப்பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட தம்மிக்க ஜயசுந்தரவுக்கு, இலங்கை பொறியியல் சேவையின் பொருத்தமான பதவியொன்று வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.