செய்தி

இலங்கை விமான நிலையத்தில் புதிய தொழில்நுட்பம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கேட் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு கடவைகள் அல்லது மின்-கடவைகள் எனப்படும் நான்கு சுய சேவை வாயில்கள் சமீபத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், முழுமையாக தானியங்கி முக அங்கீகார அமைப்பு செயல்படுத்தப்படும்.

இது மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயணிகளை திறமையாகவும் விரைவாகவும் அடையாளம் காண உதவும். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையால் இயக்கப்படும் இந்த கடவைகள் பயணிகளின் முக பயோமெட்ரிக்ஸை அவர்களின் கடவுச்சீட்டு சிப் அல்லது பின் இறுதி அமைப்பில் சேமிக்கப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடும்.

இது தடையற்ற மற்றும் பாதுகாப்பான அடையாள சரிபார்ப்பை உறுதி செய்யும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.