செய்தி

அனுராதபுரத்தில் மருத்துவருக்கு சிறை தண்டனை

அனுராதபுரத்தில் , ஒரு குழந்தையின் தாயின் உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதாகக் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

25 வயதான  இளம் தாய் ஒருவரே  இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். பெண்ணை பாலிய வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நளின் டி ஹேவாவசம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 1.5 மில்லியன் ரொக்க இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இழப்பீட்டுத் தொகைக்கு கூடுதலாக, ரூ. 100,000 ரொக்க அபராதம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி இழப்பீடு வழங்கப்படாவிட்டால், மருத்துவருக்கு மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

சிகிச்சைக்கு சென்ற பெண் மீது மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்தமை நீதிமன்றில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து மேற்படி தண்டனை மருத்துவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.