செய்தி

படுகொலையில் முடிந்த கணவன் – மனைவி தகராறு

குடும்பத் தகராறினால் பெண் ஒருவர் அவரது கணவரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

மெதயெல்ல வாவி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் நீண்ட காலமாக நிலவிய குடும்பத் தகராறினால் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் கணவர் என அடையாளம் காணப்பட்ட 48 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.