செய்தி

ரயிலுடன் வேன் மோதி விபத்து

அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், இன்று காலை சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து, அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன் வேன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில், வேனை செலுத்திய பெண் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.