செய்தி

அதிகரிக்கும் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை

நாடு முழுவதும் 1,139 சிறப்பு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(07.08.2025) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு மருத்துவர்களின் சேவைகள் கிடைக்க வேண்டிய 134 இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் சிறப்பு பராமரிப்பு மருத்துவமனைகளில் 2042 சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு, பதவி விலகல் மற்றும் சேவைகளை வெற்றிடமாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் நாடு 570 சிறப்பு மருத்துவர்களின் சேவைகளை இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2020 முதல் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 233 சிறப்பு மருத்துவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 82 பேர் சேவைகளை வெற்றிடமாக்கியுள்ளனர்.

மேலும், 7 பேர் பதவி விலகியுள்ளனர். 57 பேர் பல்வேறு தேவைகளுக்காக பிற நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 191 சிறப்பு மருத்துவர்கள் சம்பளமில்லா விடுப்பில் சென்றுள்ளனர் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போது இருக்கும் சிறப்பு மருத்துவர்களில் 201 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் 546 பேர் 55 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.