செய்தி

மஸ்கெலியாவில் மண்சரிவில் புதையுண்ட 5 மீட்பு

மஸ்கெலியாவில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பனியன் பலத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஐந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மஸ்கெலியா பகுதியில் பெய்த கடும் மழையினால் வீடொன்றின் மீது பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்துள்ளது.

புதன்கிழமை (06) மதியம் 12:00 மணியளவில் அந்த மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவர் மீது மற்றொரு மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

பொது மக்கள் இணைந்து மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த ஐவரையும் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.