செய்தி

80 அடி நீள இழுவைப் படகுடன் கைதான இந்தியர்கள்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்துக்காக இந்திய மீனவர்கள் 10 பேரை பத்தலன்குண்டு பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பயன்படுத்திய இழுவைப் படகு 80 அடிக்கும் அதிக நீளமான தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகும்.

குறித்த படகையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த படகில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள், ஜி.பி.எஸ் வரைபடங்கள், மீன்களைக் கண்டறியும் கருவிகள்

போன்றவை இருந்ததாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.