செய்தி

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

மூன்று உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலனறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பகுதியில் மேற்படி 3 சந்தேகநபர்களும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரலகங்வில பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அரலகங்வில ருஹுனுகம பகுதியை சேர்ந்த 31, 34 மற்றும் 39 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூவரும் குடும்பஸ்தர்கள் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.