செய்தி

திருகோணமலையில் குரங்குகளின் தொல்லை

திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகுவதாக தெரிவித்துள்ளனர்.

குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை உட்கொள்வதோடு வீட்டு உபகரணங்களுக்கும் சேதம் விளைவித்து வருகின்றன.

அத்தோடு வீட்டு காணிகளில் உள்ள பயன்தரும் மரங்களில் காணப்படும் பூக்கள், பழங்கள் உள்ளிட்டவைகளை சாப்பிட்டு செல்வதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் வீடுகளில் சிறு பிள்ளைகளை வைத்திருப்பது கூட அச்சமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென தோப்பூர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.