செய்தி

உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம்

தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தஹய்யாகலவில் உள்ள கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டு யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் பலமுறை சிகிச்சை அளித்திருந்த நிலையிலும், அது இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யானையின் மரணத்திற்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.

யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.